வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சோகமடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டிய தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு வருகின்றன.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக விளங்கும் போப் பிரான்சிஸுக்கு 87 வயதாகிறது. அவர் பல ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், சமீபத்தில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் உடல் நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. போப் பிரான்சிஸ், சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சில நிகழ்வுகளை தவிர்த்துவந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியதும், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
போப்பாண்டவரின் உடல்நிலை மேலும் மோசமடையலாம் என்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாடிகன் நிர்வாகம் ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே போப்பாண்டவர் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் இந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளுக்கு அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வார ஞாயிற்றுக்கிழமையும் கூட போப்பாண்டவர் வழிபாடுகளில் பங்கேற்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}