சென்னை: விறுவிறுப்பான திரைக்கதையில் புது முகங்கள் நடித்து வரும் பிரபஞ்சம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக் குழுவினர்.
பிரைட் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ் ஏ கரீம் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரபஞ்சம் படத்தை சங்கர் ஜி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் இவர் பிரபஞ்சம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் பணிபுரிந்தவர்.

இதில் வீரா, சமிதா, அம்ருதா வி.ராஜ், போஸ் கதிர்வேல், குருமூர்த்தி, ரோஹித், மற்றும் பல புதுமுக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்பட தொகுப்பை, ரகு கையாண்டு பிரேம் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபஞ்சம் படம் குறித்து இயக்குனர் சங்கர் ஜி கூறியதாவது, இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்க்கையில் இன்ப துன்பங்களை சந்தித்து வருகிறார்கள் இந்த பிரபஞ்சம் எல்லோருக்குமானது என்று நினைக்கிறோம். ஆனால் வாழத் தெரியாதவர்களுக்கே இந்த பிரபஞ்சம் வசப்படுகிறது என்பதை பரபரப்பான கதைையாக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்கியிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!
கடந்த காலத்தின் பசுமை நினைவுகள்
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
கோடைக்கால மேகம்
{{comments.comment}}