+1 மற்றும் +2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வுகள் தொடக்கம்

Feb 12, 2024,12:25 PM IST

சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள +1 மற்றும் +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.


தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான  10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல்  மாதத்திற்குள் நடந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவுள்ளனர்.




 இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (பிப்ரவரி 12ஆம் தேதி)  தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி பாட வாரியாக காலை மற்றும் மாலை வேலைகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது.


இதற்கான ஏற்பாடுகளை அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளன. அரசு தேர்வு துறை வழிகாட்டுதலின் படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஒரு அறைக்கு  25 முதல் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 17ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி, தேர்வுக்கான பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிப்., 19ம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

news

டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்