பெங்களூரு: விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் பத்திரமாக வெளியே வந்துள்ளது. இதன் மூலம் சந்திரயான் 3 திட்டத்திற்கு அடுத்த வெற்றி கிடைத்துள்ளது.
சந்திரயான் 3 திட்டம் முழுமை பெற்றுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து முதலில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. அதன் பின்னர் இன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.

நிலவில் இறங்கிய பின்னர் 10 மணிக்குப் பிறகு லேண்டரிலிருந்து சாய்தளம் திறக்கப்பட்டது. பிறகு அதன் வழியாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. நிதானமாக அடியெடுத்து வைத்து நகர்ந்து நகர்ந்து நிலவைத் தொட்டு நின்றது பிரக்யான் ரோவர்.
பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு படு பிசியாக இருக்கும். நிலவின் தரைத் தளத்தில் அது பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளது. பூமியின் 14 நாட்கள் என்பது நிலவைப் பொறுத்தவரை 1 நாள்தான். ஆக, நிலவில் ஒரு நாள் ஆய்வு நடத்தவுள்ளது பிரக்யான் ரோவர். அதேசமயம், இந்த ரோவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மேலும் ஒரு நிலவு நாள் கூட அது செயல்பட வாய்ப்புண்டு. அதாவது மேலும் 14 பூமி நாட்களுக்கு அது நிலவில் ஆய்வு மேற்கொள்ள முடியும்.
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}