சென்னை: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் பொதுக்குழுவைக் கூட்டி இன்று இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிக நிறுவனராக, தலைவராக இருந்து வரும் விஜயகாந்த் வசம் பொதுச் செயலாளர் பதவி இதுவரை இருந்து வந்தது. அவர் உடல் நலிவுற்றிருப்பதால் அவரிடமிருந்த பொதுச் செயலாளர் பதவியை பிரேமலதாவுக்கு கொடுத்துள்ளது தேமுதிக பொதுக்குழு. சென்னை திருவேற்காட்டில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவெடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்ற பட்ட பின்னர் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற பின் பிரேமலதா பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், பிரேமலதாவுக்கு வீரவாள் கொடுத்தும், அவருக்கு பிரமாண்ட மாலை அணிவித்தும் கட்சி நிர்வாகிகள் கெளரவித்தனர். புதிய பதவியில் அமர்த்தப்பட்டதும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார் பிரேமலதா விஜயகாந்த்.
பிரேமலதா பேசும்போது, எதிர்பாராத வகையில் பொதுச் செயலாளராக என்னை கேப்டன் அறிவித்துவிட்டார். தீபாவளி போனஸ் போல் எனக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறினர். இந்த பதவி எனக்கு கொடுக்கப் போகிறார் என்பது நான் உட்பட யாருக்கும் தெரியாது. என்னை வாழ்த்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
கேப்டனிடமிருந்து பாராட்டும் பதவியையும் பெறுவது எளிதல்ல. உண்மை உழைப்பு இருந்தால்தான் தேமுதிகவில் வளர்ச்சி இருக்கும். வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.
குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்கு வருவதை அந்த கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்க முடியாத நிலையில் ஆளுங்கட்சி உள்ளது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
வீல் சேரில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்த்
முன்னதாக சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் குணமடைந்த விஜயகாந்த், வீல் சேரில் அமர வைக்கப்பட்டு மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அவரால் இயல்பாகவே உட்கார முடியவில்லை. சாய்ந்து விழுந்தார். அவருக்கு அருகில் இருந்தோர் அவரைத் தாங்கிப் பிடித்தபடியே இருந்தனர்.
விஜயகாந்த்தை வீல்சேரில் நலிவடைந்த நிலையில் பார்த்த கட்சி நிர்வாகிகள் பலர் கலங்கிய கண்களுடன் அவரையே பார்த்தபடி இருந்தனர்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}