அனைவரும் இணைந்து தேமுதிகவை பலப்படுத்த வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

Dec 30, 2023,05:18 PM IST

சென்னை: விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட  இடத்துக்கு எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அனைவரும் இணைந்து தேமுதிகவை பலப்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று முழு அரசு மரியாதைகளுடன் தேமுதிக தலைமைக் கழக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குடும்பத்தினர் கூடி பல்வேறு சடங்குகளைச் செய்தனர். அதன் பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 


பிறப்பு என்பது ஒரு நிகழ்வு. அதன் இறுதி வரலாறாக இருக்க வேண்டும் என்பார்கள். விஜயகாந்த் தனது வாழ்க்கையில் வரலாறு படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். இறுதிச் சடங்கின்போது எல்லோரையும் உள்ளே விடணும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் இடம் சின்னது, லட்சக்கணக்கானோரை உள்ளே விட முடியாது என்று போலீஸ் சொன்னார்கள். ஆனால் இன்று முதல் எந்த கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்க. அவர் உங்க வீட்டுப் பிள்ளை. அவருடைய சமாதிக்கு வாங்க. எங்க ஆட்கள் இருப்பாங்க. மரியாதை செய்யுங்க, பிரே பண்ணுங்க.




கேப்டன் விட்டுச் சென்ற பணிகள் ஏராளமாக உள்ளது. ஊருக்கே சோறு போட்டவர் அவர், உலகுக்கே சாப்பாடு போட்டவர் அவர். அவர் இல்லை என்பதை நினைக்கவே முடியலை. ஒவ்வொரு பருக்கையிலும் கேப்டன்தான் தெரிகிறார். நாங்க யாருமே சரியா சாப்பிடலை. எல்லோருமே வந்து அவரைப் பாருங்க. அஞ்சலி செலுத்துங்க. மிகப் பெரிய கடமை, பொறுப்பை கொடுத்துட்டுப் போயிருக்கார். கடமைகள் அத்தனையையும் அனைவரும் ஒரே கரமாக இணைந்து ஈகோ பாகுபாடு பார்க்காமல் பாடுபட்டு, அவரது கொள்கையை வென்றடெுப்பது தான் எங்களது கடமை. அதை அவரது சமாதியில் சமர்ப்பிப்போம். அதற்காக நாங்கள் பாடுபடுவோம்.


பொது இடத்தில் கேப்டனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கோம். முதல்வர், அமைச்சர்களிடம் சொல்லியுள்ளோம். பொதுவான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து முக்கிய இடத்தில் அமைக்க வேண்டும், அதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இது எங்களது கோரிக்கை மட்டுமல்ல, மக்களின் கோரிக்கையும் கூட.


கேப்டனின் புகழ் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை நிலைத்திருக்கும். அவரது கொள்கையை வென்று எடுப்போம் என்று இந்த நாளில் சொல்லிக் கொள்கிறோம் என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்