2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்

Feb 19, 2026,06:02 PM IST

சென்னை: 2016ம் ஆண்டிலேயே கேப்டன் உயிருடன் இருந்தபோதே திமுக கூட்டணி வந்திருக்க வேண்டியது. 10 வருடம் தாமதமாக அது நடந்திருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


திமுக கூட்டணியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது. திமுகவும், தேமுதிகவும் இன்று கூட்டணியை உறுதி செய்துள்ளோம்.


கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது. அதற்கேற்ப இதை அமைத்துள்ளோம்.




2016ம் ஆண்டிலேயே நாங்கள் இணைந்திருக்க வேண்டியது. கலைஞர் பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்றால். ஆனால் கேப்டன் இப்போது இல்லாத நிலையில் இந்தக் கூட்டணி தாமதமாக 10 வருடம் கழித்து நடந்துள்ளது. இந்தக் கூட்டணி 200 சதவீதம் வெற்றி பெறும்.


இப்போது கூட்டணிக்கு வந்துள்ளோம். உறுதி செய்துள்ளோம், கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இனிமேல்தான்  எத்தனை தொகுதிகள், யார் யார் எந்ததெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்துப் பேசுவோம். அதற்காக குழு அமைத்து அதெல்லாம் நடைபெறும்.


மற்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்து நடைபெறும்போது நான் பதிலளிப்பேன் என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.


தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளிக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்