டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு ஜனாதிபதி முகம்மது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். ராணுவம், அரசியல் கட்சிகள், மாணவர் இயக்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் ஜனாதிபதி.
முன்னதாக இன்று மாலை 3 மணியுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போராட்டத்திலும், கலவரத்திலும் ஈடுபட்டுள்ள மாணவர் இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்தே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார்கள்.

மாணவர்கள் போராட்டம் வன்முறையாகவும், கலவரமாகவும் மாறிய நிலையில் தற்போது மோசமானதொரு சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் நேற்று புகுந்த மாணவர்கள் அதை சூறையாடி விட்டனர். நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து அதை சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல ஷேக் ஹசீனா வீட்டுக்குள்ளும் புகுந்து வீட்டையே சூறையாடி விட்டனர். ஷேக் ஹசீனா குடும்பத்தினரின் பொருட்களையெல்லாம் தூக்கிச் சென்று விட்டனர். அவர்கள் பயன்படுத்தி உள்ளாடைகளைக் கூட விடாமல் எடுத்துச் சென்று அநாகரீகமாக அதை காட்டி நடனமாடியது உலக மக்களிடையே பெரும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்றவரான முகம்மது யூனிஸ் தலைமை தாங்க வேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மாணவர்கள் வசம் இப்போது நாடு போய் விட்டதால் இதை ஜனாதிபதி கேட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மேலும் ராணுவத்தின் ஆட்சியையும் மாணவர்கள் விரும்பவில்லை.
இதுகுறித்து நஹீத் இஸ்லாம் என்ற மாணவர் தலைவர் கூறுகையில் ராணுவத்தின் ஆதரவுடனோ அல்லது ராணுவத்தின் தலைமையிலோ அரசு அமைந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். முகம்மது யூனிஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அவருடன் நாங்கள் பேசி விட்டோம். அவரும் சம்மதித்து விட்டார் என்று கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு வரும் வரை வங்கதேசம் கொதி நிலையிலேயே இருக்கும் என்று தெரிகிறது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}