டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தால் கடந்த 2 வருடமாக பொசுங்கிப் போயிருக்கும் மணிப்பூரில், முதல்வர் பதவி வகித்து வந்த பைரன் சிங் மிக மிக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் பதவி விலகிய நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துள்ளது.
இனி மணிப்பூர் மாநில நிர்வாகத்தை ஆளுநர் கவனிப்பார். மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்து மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. கடந்த 2 வருடமாக கலவரம் ஓயவில்லை. பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய அளவிலான பொருட் சேதத்தையும் அந்த மாநிலம் கண்டுள்ளது.
கலவரத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் பைரன் சிங் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனாலும் பைரன் சிங் விலகவில்லை. இந்த நிலையில் பைரன் சிங் கலவரத்தைத் தூண்டி விட்டுள்ளதாக கூறி ஆடியோ ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தப் பின்னணியில் இன்று மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதுதொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. ஆளுநர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
பைரன் சிங் விலகலைத் தொடர்ந்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க பாஜக தலைமை முயன்றது. ஆனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
வேலின் விழி திறப்பது திருத்தணியில்!
Gold price:தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை... இன்றை முழு விபரம் இதோ!
சோமாவாரத்தில் பிறந்த கார்த்திகை மாதம்.. மிக மிக விசேஷம்!
தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை.. வான்மழை மட்டுமல்ல.. ஆன்மீகமும் பொழியும் மாதம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 17, 2025... இன்று கார்த்திகை சோமவார பிரதோஷம்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}