கொழும்பு: இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி இலங்கையில் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். அணி வகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கி இலங்கை அதிபர் அநுரகுமர திசநாயக கவுரவித்துள்ளார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா-இலங்கை இடையேயான உறவு நன்றாக உள்ளது. தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினையில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றது. இலங்கை அதிபராக திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள 3 கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேசுகையில், இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இந்தியா-இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செலும் இந்த மண்ணில் நடக்காது என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கையில் தரையிரங்கி விட்டேன். விமானநிலைத்திற்கு வந்து என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி. இலங்கையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}