மாஸ்கோவை அதிர வைத்த தீவிரவாத தாக்குதல் .. ஐ எஸ் ஐ எஸ் பொறுப்பேற்பு.. பிரதமர் மோடி கண்டனம்

Mar 23, 2024,09:42 AM IST

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த செயலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது


ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று இரவு ஒரு இசை நிகழ்ச்சி நடந்து வந்த அரங்கில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ  சீருடையில் இருந்த இவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியை காண வந்தவர்கள் சிதறி ஓடினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கியும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் பலர் பலியானார்கள். அந்த இடம் முழுவதும் உடல்களாக கிடந்தது புகை மூட்டமாக கிடந்தது.




துப்பாக்கி சூடு மட்டுமல்லாமல் கை எறி குண்டுகளையும் அவர்கள் பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத செயல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் உடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவில் அதன் தலைநகரிலேயே நடந்துள்ள இந்த பயங்கரவாத செயல் ரஷ்யாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


முன்னதாக இசை நிகழ்ச்சி நடந்து வந்த அரங்கிற்குள் ராணுவ சீருடையில் பலர் உள்ளே புகுந்துள்ளனர். உள்ளே புகுந்த அவர்கள் கண்மூடித்தனமாக தானியங்கி துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அந்த அரங்கில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் வேகமாக வெளியேற முற்பட்டதில் கூட்டம் நெரிசலும் ஏற்பட்டது. இதிலும் சிலர் பலியாகி உள்ளனர்.


பிரதமர் மோடி கண்டனம்


ரஷ்யாவில் நடந்துள்ள இந்த பயங்கரவாத செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் ரஷ்யாவுக்கு துணை நிற்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறுகையில் சம்பவம் நடந்த இடம் தொடர்பான காட்சிகள் மிகவும் அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.  பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த தீவிரவாத செயல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இது ரஷ்யாவுக்கு மிகவும் கடினமான தினம் என்று அவர் கூறியுள்ளார்.


முன்னதாக கடந்த மாதமே ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடக்கலாம் என்று ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தது. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 48 மணி நேரங்களில் பெரும் அளவிலான கூட்டங்கள் நடைபெறும் இடங்களை விட்டு அமெரிக்கர்கள் தள்ளி இருக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே இப்படி ஒரு தீவிரவாத சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஷ்ய பாதுகாப்பு ரஷ்ய உணவு அமைப்பு ஒரு தீவிரவாத தாக்குதலை தடுத்ததாக செய்தி வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம். அப்பொழுது தடுக்கப்பட்ட தீவிரவாத தாக்குதல் தற்போது நடந்திருப்பது ரஷ்யாவின் உளவுத்துறையின் தோல்வியாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்