வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வந்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி வாரணாசியிலிருந்து வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு மீண்டும் போட்டியிட்டுள்ளார். வாக்குகள் எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் மோடி 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதல் சுற்று நிலவரப்படி, வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் பிரதமர் மோடியும், 3வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதீர் ஜமால் லாரியும் உள்ளனர். இந்த்த தொகுதியில் நோட்டாவுக்கு 158 வாக்குகள் முதல் சுற்றில் கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி பின்னடைவு என்பது மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் பாதிக்குப் பாதி தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. வாரணாசி உ.பியில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}