சென்னை: சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மையங்களும் இணைந்து கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை (ஜனவரி 24) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து நாளை 24ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் 8ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், ஐடி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு படிப்பை முடிந்தவர்களும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லையாம். அனுமதியும் இலவசமாம்.
இந்த முகாம் சென்னையில் மட்டும் இல்லங்க நாளை கோவை, புதுக்கோட்டை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கல்நது கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தொழிலாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாம்களில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பனி நியமன ஆணைகள் உடனடியாகவும் வழங்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
இராதாவும் விஜியும்.. ஒரு நிமிடக் கதை (18)
காலத்தை வென்றவன்!
Teachers Are Builders of Tomorrow
அருளாட்சி புரியும் அன்னை மீனாட்சி!
{{comments.comment}}