சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புயல் இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயலாக உருவாகிறது. பரங்கிப்பேட்டை- சென்னை இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழ்நாடு இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மெதுவாக நகர்வதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக நகர்வதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
,தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தமிழ்நாட்டின் கரையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கி கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
இதன் காரணமாக விழுப்புரம், சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகும் புயல் இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயலாக உருவாகிறது. பரங்கிப்பேட்டை- சென்னை இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று!
அப்பம், அம்மா அப்பம் .. சிறார் பாடல்!
அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கணேசன் - !
இரவும் கனவும்!
அந்தக் கண்ணாடிக்காரன் கொடுத்து வைத்தவன்!
புரட்டாசி விரதம்.. ஒரு நிமிடக் கதை (24)
முதியோர் உடல் நலம்!
அம்மா பாடிய தாலாட்டு
{{comments.comment}}