வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களைவைத் தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தேர்தலில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதி மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் அவர் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் விதிகளின்படி ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும் என்பதால், ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

இதனால் இத்தொகுதி காலியாக இருந்து வந்தது. இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பை வெளியிட்டது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் சத்தியன் மோக்கேரி ஆகியோர் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளனர். இதனால் இங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பிரியங்கா காந்தி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உடன் இருந்தனர். தொண்டர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}