டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் சேர்ந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்தவழக்கில் ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மணீஷ் சிசோடியா பலமுறை ஜாமீன் கேட்டு மனு செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் ஜாமீன் கிடைக்காததினால், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மதுபான கொள்கையில் நடந்தமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நவம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}