ஆடியிலே அலைமோதி ஆர்ப்பரிக்கும் காவிரியில்!

Aug 05, 2026,12:51 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


ஆடியிலே அலைமோதி 

ஆர்ப்பரிக்கும் காவிரியில்

குடும்பங்கள் கூடிவந்து 

கொண்டாடி மகிழுதம்மா


பதினெட்டு படி நிரம்பி 

பாய்ந்தோடும் காவிரியில்

பந்தங்கள் சேர்ந்து வந்து 

பரவசம் ஆகுதம்மா


படியிலே படையலிட்டு 

பழம் தேங்காய் உடைத்து வைத்து

பக்தியுடன் விளக்கேற்றி

புதுமணத் தம்பதிகள் 

புனித நீர் ஆடுதம்மா




மஞ்சளும் நூல் எடுத்து 

மங்களமாய் அதை நனைத்து

பெண்களுக்கு அணி சூட்டி 

பெருமிதம் காணுதம்மா


ஆடி பதினெட்டு 

ஆனந்தப் பெருநாளில்

அண்ணன் கையில் 

நூல் கட்டி அக்கா தங்கை 

கொண்டாட்டம்


பச்சரிசி சக்கரையை 

பாங்கோடு கலந்து

பரிமாறிக் கொண்டாடும் 

ஆடி பதினெட்டு

ஆற்றங்கரையில் 

ஆனந்தமாய்க் கொண்டாட்டம்


ஆட்டம் பாட்டம்

அனைவரும் கொண்டாடு

பாரெங்கும் நடக்கும் 

அது தான் நம் பண்பாடு


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்