Motivation: மனிதம் எனப்படுவது யாதெனில்... பிடிஆர் செய்த இந்த செயல்தான்!

May 18, 2023,02:33 PM IST

சென்னை: ஒரு ஏழை டெய்லருக்கு மிகப் பெரிய உதவியை அளித்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்  தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மனிதாபிமானம், மனிதம் எல்லாம் மரித்துப் போய்க் கொண்டிருக்கும் காலம் இது. சாலையோரத்தில் யாராவது மயங்கிக் கிடந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ ஓடோடிச் சென்று உதவி செய்வோர் இன்று அருகிப் போய் விட்டனர். அவரவர் வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருப்பவர்களே அதிகம்.

அதேபோல மனிதாபிமானத்துடன் அடுத்தவருக்கு உதவுவதும் கூட இன்று இல்லாமல் போய் விட்டது. சுயநலம் மலிந்து போய் விட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு மிகப் பெரிய காரியத்தை செய்துள்ளார்.



கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத் தரும் பணியினை செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலில் தகவல் வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார் நாகேஷ்.

அதில் தான் மிகவும் சிரமப்படுவதாகவும், தனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்றும் கோரியிருந்தார் நாகேஷ். இதையடுத்து அவரது கோரிக்கையைப் பரிசீலித்து உடனடியாக நாகேஷுக்கு வீட்டு மனை வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தன்னால் ஆன ஒரு உதவியைச் செய்துள்ளார்.

நாகேஷை தனது வீட்டுக்கு வரவழைத்த பிடிஆர் அவரிடம் பரிவுடன் பேசி அவரது குடும்ப நிலை குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் ஒரு நிதியுதவியினை வழங்கினார். தற்போது டெய்லர் நாகேஷுக்கு பலரும் உதவ முன்வந்துள்ளதால் அவரது நிலை விரைவில் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

செயல்பாடுகள் மூலம் கற்றல்: தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு மூளைத் திறன் மேம்பாட்டு பயிற்சி

news

மயக்கும் மயிலே.. மயங்கும் மனமே!

news

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முக்கிய இலக்கியப் படைப்புகள்!

news

சிவனே போற்றி! அரனே போற்றி!

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்