பிளஸ்டூ தேர்வுகள் நாளை தொடக்கம்.. மாணவர்களே ரிலாக்ஸா போய்.. ஜம்முன்னு எழுதிட்டு வாங்க!

Feb 29, 2024,07:22 PM IST
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  2024-2025ம் ஆண்டுகளுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் வருகிற 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் 9.25 லட்சம் மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுத 3,300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபவர்கள் பிடிக்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளும் மிதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உட்பட மின் சாதனம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ் பாடத் தேர்வுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 



ஒவ்வொரு தேர்விற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் இடைவெளி விட்டு வருகிற 22ஆம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையில் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு வருகிற 4ம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி எனப்படும் 10 வகுப்பு மாணவிகளுக்கு வருகிற 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்க உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்