- கலைவாணி கோபால்
புதுச்சேரி: விஜய்யின் மக்கள் சந்திப்பு இன்று புதுச்சேரியில் திட்டமிடப்பட்ட நிலையில் வழக்கத்தை விட முதல் முறையாக முன்கூட்டியே புதுச்சேரிக்கு வந்து விட்டார் தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் புதுச்சேரியில் உள்ள உப்பளம் பகுதியில் முதல் முறையாக விஜய்யின் மக்கள் சந்திப்பு என்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடக்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் தமிழ்நாட்டுக்கு வெளியே விஜய் கலந்து கொள்ளும் முதல் கூட்டமும் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.
இதுவரை நடந்த விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டங்களுக்கு விஜய் தாமதமாகத்தான் வந்தார். கூட்டம் நடைபெறும் ஊருக்கே அவர் பல மணி நேரம் தாமதமாகத்தான் வந்தார். கூட்ட இடத்திற்கும் தாமதமாகத்தான் வந்தார். இதுவே கரூர் விபரீதத்திற்குக் காரணம் என்று தமிழ்நாடு காவல்துறையும் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் வழக்கத்தை விட முன்கூட்டியே இன்று புதுச்சேரிக்கு வந்து விட்டார் விஜய். அதேபோல வழியெங்கும் அவரது வாகனத்தின் பின்னால் பெருமளவில் கூட்டம் கூடவில்லை. சிலர் கூடவே வந்தாலும் கூட விஜய்யின் வாகன வேகத்தை அதைத் தடுக்கவில்லை.
மேலும், கரூர் போல கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க தொண்டர்கள் அதிகம் சேராமல் இருக்க5000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டடது. ஆனால் அதை விட பல மடங்குக்கு அதாவது கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் அங்கு கூடி விட்டனர். பாஸ் இல்லாத பலரும் கூட மைதானத்துக்குள் போய் விட்டனர். இதனால் வழக்கம் போல பெரும் தொண்டர்கள் கூட்டம் அங்கு கூடியிருக்கிறது.
ஒரு தொண்டருக்கு ஒரு பாஸ் என்ற விகிதத்தில் பொதுக் கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதித்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஸ் இல்லாதவர்களையும் அனுமதிக்க கோரியதால் காவல்துறையினர் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக அங்குள்ள பெண் காவல்துறை அதிகாரிக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே சிறிய வாக்குவாதமும் ஏற்பட்டது.
அதேசமயம், புதுச்சேரி காவல்துறையினர் மிகவும் விரிவான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் போய் விடாத வகையில் அங்கு கடுமை காட்டியும் காவல்துறையினர் நடந்து கொள்வதால் கூட்டம் பெரிய அளிவில் பிரச்சினை செய்யாமல் உள்ளது.
கரூர் சம்பத்தை போல இங்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கவே போலீஸ் அதிகாரிகள் மிகவும், சரியான முறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், ஏனெனில் பெண் தொண்டர்களும் அதிகமாக உள்ளனர். இதனால் மிகவும் கவனமுடன் தொண்டர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}