புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டசபை தேர்தல் 2026...காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Apr 09, 2026,06:20 PM IST

டில்லி : புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 09ம் தேதியான இன்று காலை 7 மணிக்கு துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தலுக்கான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் இன்று கேரளா, புதுசு்சேரி, அசாம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 09ம் தேதியான இன்று ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 




கேரளாவில் உள்ள 140 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகள், அசாமில் உள்ள 126 தொகுதிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது. மக்கள் காலையிலேயே ஆர்வமுடன் வந்து தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். இன்று பதிவாகும் ஓட்டுக்கள் மே 04ம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். 


இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும். இதில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க போகிறார்கள் என்பது தெரிவிந்து விடும்.  தற்போது புதுச்சேரியில் பாஜக கூட்டணி வகிக்கும் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சியும், கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான ஆட்சியும் நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!

news

இடர்பாடுகள்

news

ஆசிரியர் எனும் அகல்விளக்கு!

அதிகம் பார்க்கும் செய்திகள்