புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு ஸ்வீட்ஸ்டாலை மர்ம நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விநாயக முருகன் என்ற டீ ஸ்டால் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாமுல் கேட்டு ஒரு கும்பல் கடையை சூறையாடி தாக்கியது. இதுதொடர்பாக கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பினர், வர்த்தக சபையினர், பல்வேறு வியாபாரிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், ஐஜி ஆகியோரைச் சந்தித்து பாதுகாப்பு கோரியும், இதுபோல மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனு அளித்தனர்.
இப்படி ஒரு பக்கம் கடைக்காரர் தரப்பில் சீரியஸாக நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில் அந்த முருகன் டீ ஸ்டால் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு மீண்டும் அக்கடையை மர்ம நபர் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
என்னடா இது முருகன் டீ ஸ்டாலுக்கு வந்த சோதனை என்று குழப்பமடைந்துள்ள ரெட்டியார் பாளையம் இந்த சம்பவத்தையும் வழக்காக பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}