அல்லு அர்ஜூனின் புஷ்பா 2.. டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை.. அமெரிக்காவில் அதிரடி சேல்ஸ்

Nov 25, 2024,05:54 PM IST

நியூயார்க்: அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்திற்கு அமெரிக்காவில் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் இப்போதே அட்வான்ஸ் புக்கிங் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதாம்.


இதுவரை 50,000 முன்பதிவு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த இந்தியப் படமும் செய்திராத சாதனை இது என்றும் சொல்லப்படுகிறது. வட அமெரிக்காவில் இதுவரை 1.46 மில்லியன் டாலர் அளவுக்கு டிக்கெட் முன்பதிவு நடந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் இது மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.




மறுபக்கம் புஷ்பா 2 டீசரும் படு வேகமாக அதிக பார்வைகளைக் குவித்துக் கொண்டுள்ளதாம். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டாகும், பிளாக்பஸ்டராகும் என்று படத்தின் இசையமைப்பாளர் டிஎஸ்பியும் கூறியுள்ளார். டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


நடிகர் அல்லு அர்ஜூன் தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் ரசிகர்களை கொண்ட நடிகர். இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது.


இந்நிலையில் படத்தின் 2 பாகம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. புஷ்பா படத்தை தொடர்ந்து புஷ்பா 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


நான் ஒரு தி நகர் பையன்




முன்னதாக  புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய அல்லு அர்ஜூன் தன்னை சென்னைக்கார பையனாக பெருமிதத்துடன் கூறிக் கொண்டார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அல்லு அர்ஜூன் தமிழில் பேசத் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் தெலுங்கில் பேச சொல்லினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன்,  இந்த இடத்தில் தமிழில் தான் பேச வேண்டும். ஏனென்றால் அது இந்த மண்ணுக்கு நாம கொடுக்கும் மரியாதை. நாளைக்கு நான் துபாய்க்கு போனால், அரபு மொழியில் பேசுவேன். இந்தி என்றால் நமஸ்தே தான் சொல்லுவேன். தெலுங்கு என்றால் பங்காரம் சொல்லுவேன்.


நான் பிறந்த என் மண்ணுக்கு அன்பு வணக்கம். சென்னை மக்களே இந்த நாள் மறக்க முடியாத நாள். எத்தனையோ வருஷம் இதற்காக காத்திருந்தேன். ஏனென்றால் கிட்டதட்ட 20 ஆண்டு சினிமாவில் இருக்கின்றேன். புஷ்பா படத்தை புரொமோஷன் செய்ய வெளிநாடு, வெளிமாநிலத்திற்கு போயிருக்கேன். 


ஆனால், சென்னை வரும் போது எனக்கு இருந்த உணர்வே வேற. சென்னையில் தான் நான் வளர்ந்தேன். இங்கிருந்து தான் எல்லாத்தையும் ஆரம்பித்தேன். அதனால் சென்னையோடு உணர்வுபூர்வமான நெருக்கம் எப்போதும் எனக்கு இருக்கும். என் வாழ்க்கையில் முதல் 20 ஆண்டுகள் சென்னையில் தான் இருந்தேன். அதனால், நான் வாழ்க்கையில் என்ன சாதித்தாலும் எனது அடிதளமாகிய சென்னைக்கு நன்றி சொல்வேன். நான் ஒரு தி நகர் பையன். மேடையில் பேசும் போது அப்பப்போ தமிழ் மறந்துவிடுவேன்.


அதிக முறை நான் சென்னை வந்திருக்கேன். அதிக நிகழ்ச்சிகளில் பேசியிருக்கேன். இது தான் முதல் தடவையாக என் படத்திற்காக பேசுகிறேன். என் ஊர் சென்னையில எனக்கு ஒரு பங்ஷன் வேண்டும். அது எனது லைப்ல ஒரு அடையாளம். நான் புஷ்பா 2 படத்திற்காக 3 ஆண்டுகள் உழைத்து இருக்கேன். டிசம்பர் 5 நெருப்பு மாதிரி ஒரு படம் பார்க்க போறீங்க என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்