- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
முருகேசன் நல்ல நேரம் வந்தா எல்லாம் நல்ல படியா நடக்கும் பா. சரிப்பா நேரமாயிட்டு இருக்கு. சீக்கிரமா பொண்ணப் பார்த்துட்டா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். உங்க பெண்ணை வரச் சொல்றீங்களா? மூர்த்தி ஆவலுடன் கேட்டார்.
அண்ணே பெண்ணைப் பார்க்கனும்னா நாம பரமக்குடிக்கு தான் போகணும். அங்க தான் எங்க குடும்பம் இருக்கு. நாங்க, என் மூத்தார், கொளுந்தனார் அவங்க மனைவி பிள்ளைகள், என் மாமியார் எல்லாம் ஒரே வீட்ல கூட்டுக்குடும்பமா இருக்கோம். என் வீட்டுக்காரரும், அவர் அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்குறாங்க. மூன்று வருடத்திற்கு ஒருமுறை அவங்க இங்க தாயகம் வந்து போவாங்க ராஜம் பேசி முடிக்க..
ஓ அப்படியா? ரொம்ப சந்தோசம்மா. சரி பொண்ணு போட்டோ ஏதும் இல்லையா கேட்டார் மூர்த்தி.
ஏன் இல்லை இதோ தரேன் என்ற வசந்தி ஓடிப்போய் குடும்ப புகைப்படம் சிலவற்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்து சுகந்தியை அவருக்கு அடையாளம் காட்டினாள்.
ஆவலுடன் புகைப்படத்தில் சுகந்தியைப் பார்த்த நிமிடத்தில் அவருக்கு சுகந்தியை மிகவும் பிடித்துப்போனது.
மீனாட்சி அம்மா நீங்க பெரியவங்க. எனக்கு உங்க பேத்தி சுகந்தியை ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போதே நேரில் போய் பெண்ணை ஒரு முறை நேரில் பார்த்துப் பேசிடலாம்னு நினைக்கிறேன். நீங்க என்னம்மா சொல்றீங்க?
ஐயா, இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு., ராஜம் அவர் தான் இவ்வளவு சொல்றார் இல்ல. இன்னும் ஏம்மா யோசிச்சுட்டு இருக்க. இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு. நீங்க எல்லாரும் இப்பவே பரமக்குடிக்கு கிளம்புங்க. அவர் விருப்பப்படி சுகந்தியப் பார்க்கட்டும். அப்புறம் நடப்பது ஆண்டவன் செயல். நான் இங்க வசந்தி, பிள்ளைகளோட இருக்கேன். நீங்க புறப்படுங்க என்றார் மீனாட்சி அம்மா.
அண்ணே எங்க குடும்பத்துக்கு ஆணிவேர் எங்க சின்னம்மா. அவங்களே சம்மதம் சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன நாம இப்போதே புறப்படலாம் என்றாள் ராஜம். அடுத்த அரை மணி நேரத்தில் ராஜம், மூர்த்தி, முருகேசன், மாரிமுத்துவைச் சுமந்து கொண்டு அந்தக் கார் பரமக்குடி நோக்கிப் பறந்தது.
தம்பி முருகா நாம வீட்டுக்கு வந்துட்டு இருக்குற விஷயத்தை பார்வதி அக்காகிட்ட சொல்லிட்டியா? ராஜம் கேட்க, அக்கா நாம வீட்ல இருந்து கிளம்புமுன்பே நான் பார்வதி அக்காகிட்ட நடந்த விஷயத்தைச் சொல்லிட்டேன். பார்வதி அக்கா எல்லாம் நான் பார்த்துக்கறேனு சொல்லிடுச்சு. நீ கவலைப்படாம வா அக்கா என்றான் முருகேசன்.
என்னம்மா தங்கச்சி. நான் இப்படி திடீர்னு பெண் பார்க்க வந்ததுல உங்களுக்கு ஏதும் சங்கடமா இருக்கா?
அது வந்து அண்ணே பொண்ணு பார்க்க வருவது சுகந்திக்குத் தெரிஞ்சா ஒன்னு கத்தி கலாட்டா பண்ணுவா, இல்ல காணாமப் போய்டுவா. அவளை எப்படி சமாளிக்கிறதுனு தான் யோசிக்கிறேன் வேற ஒன்னும் இல்ல என்றாள் ராஜம் அப்பாவியாக.
ஏம்மா இதுதான் விஷயமா? இதுக்குப்போய் வீணாக நீ பயப்படாத, கவலைப்படாத ராஜம். எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்று மூர்த்தி உரிமையுடன் பேசியது கேட்டு ராஜம் மனம் மகிழ்ந்தாள். கடவுளே சுகந்தி எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணக்கூடாது. நீ தான் காப்பாத்தனும் குலதெய்வமே என்று மனதுக்குள் வேண்டியபடி இருந்தாள் ராஜம்.
ஒன்றரை மணிநேரம் பயணத்திற்குப்பிறகு அவர்கள் வந்த கார் ராஜத்தின் வீட்டு வாசலில் வந்து நின்றது.
பார்வதி வந்தவர்கள் எல்லோரையும் முகம் மலர வரவேற்று உபசரித்தார்.
அண்ணே இவங்க என் வீட்டுக்காரரின் அண்ணன் மனைவி பேரு பார்வதி. எனக்கு கூடப்பிறக்காத அக்கா. எம் பிள்ளைங்க எல்லாருக்கும் என்னை விடவும் இவங்க மீது பிரியம் அதிகம் என்று அறிமுகம் செய்தவாறே அக்கா சுகந்தி எங்கே? அவளுக்கு பெண் பார்க்க இவங்க வரும் சேதி ஏதும் தெரியுமா? கேட்டாள்.
சுகந்தி என் தங்கச்சி கஸ்தூரி வீட்ல தான் இருக்கா. நான் அவகிட்ட எதைப்பத்தியும் சொல்லல. இரு நான் அவளைக் கூட்டிட்டு வரச்சொல்றேன் என்றவாரே நகர்ந்தார் பார்வதி.
முருகேசன் தந்த இனிப்பு, காரத்தை சுவைத்தவாறே அந்த வீட்டைச் சுற்றிலும் கண்களால் அளந்து கொண்டு இருந்தார் மூர்த்தி..
அந்த வீட்டை ஒட்டிய சிறு சந்துக்குப் பின்னால் தன் சித்தி வீட்டில் சந்தோசமாக பேசிச்சிரித்தபடித் தோழிகள் சிலருடன் பரமபதம் விளையாடிக் கொண்டு இருந்தாள் அந்தக்காந்தக் கண் அழகி சுகந்தி!!!.
அக்கா பெரியம்மா ஊர்ல இருந்து வந்துடுச்சு. உன்னை சீக்கிரமா கூட்டிட்டு வரச்சொன்னாங்க அக்கா என்றாள் சுகந்தியின் சித்தி
பெண் மாலதி.
ஏய் என்ன மாலா சொல்ற. அடுத்த வாரம் வர்றேனு சொல்லிட்டு மதுரைக்குப் போன எங்க அம்மா எப்படி இன்னிக்கு வந்தாங்க?
சுகந்தி அக்கா அது எல்லாம் எனக்குத் தெரியாது. நீ வீட்டுக்கு வாயேன் என்று அழைத்தவள் கரத்தைப் பற்றிக்கொண்டவள் டி நீங்க விளையாட்டைக் கன்டின்யூ பண்ணுங்க. நான் அப்புறமா வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன் என்றவள் பதிலை எதிர் பாராமல் சிட்டுக்குருவியாய்ப் பறந்தாள் அவள்.
சுகந்தி எனும் அந்த அழகு இளமைப்புயலுக்கு வயது இருபத்தைந்து. மாநிறத்துக்கும் கூடுதலான நிறம். அவள் பேரழகியாக இல்லை தான். ஆனாலும் ஒருமுறை பார்த்தால் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி தான் அவள். நல்ல உயரம். கரு வண்டுக்கண்கள். அடர்த்தியான நீண்ட கருங்கூந்தலில் லூசாக இரட்டைப்பின்னல். தலையில் ஒருபக்கத்தில் அன்று மலர்ந்த சிவப்பு ரோஜா.
முன் நெற்றியில் சிறு ஸ்டிக்கர் பொட்டு, காதில் சிறு ஜிமிக்கி தோடு, கழுத்தில் மெல்லிய கோல்டு செயின், ஒயிட் அன்ட் ஒயிட் பாவாடை, சட்டை, மெரூன் கலர் தாவணி, முன்னெற்றியில் அடங்காது விழும் சிறு சுருள் முடி அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.
அடுத்த வாரம் வருவதாகச் சொல்லிப்போன அம்மா எதுக்கு இன்னிக்கே வந்தாங்க. வந்ததும் வராததுமா எதுக்கு என்னைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க என்ற சிந்தனையோடு மாலதி கைபிடித்தவாறு நடந்தவள் தன் வீட்டு வாசலில் நின்ற காரைப் பார்த்து சிறிது நேரம் நின்றாள். பிறகு "பெரியம்மா யாரு வந்திருக்காங்க" என்று கேட்டபடி வீட்டுக்குள் சென்றாள் அந்த அழகு மயில் சுகந்தி.
(தொடரும்)
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)
வானிலை விடுத்த அலர்ட்.. இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களுக்குனு தெரியுமா?
கோவையின் புதிய அடையாளம்... ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முத்துராமலிங்கத் தேவர் பெயரை நீக்கியவர்கள்.. ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டியது ஏன்?.. சீமான் கேள்வி
எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
அன்று ஆட்சியருடன்.. இன்று ஆளுநருடன்.. மாறுவேடத்தில் அசத்தி வரும் யோகஸ்ரீ!
வட இந்தியாவில் வெகு விசேஷமாக கொண்டாடப்படும் கர்வா செளத்.. அப்படி என்றால் என்ன?
யாராவது ஏதாவது செய்து விடலாம் என விஜய் அஞ்சுவது போல தெரிகிறது.. நயினார் நாகேந்திரன்
திமுகவில் உறுதியாக தொடர்கிறேன்.. நான் ஏன் தவெகவுக்குத் திரும்ப வேண்டும்.. வைஷ்ணவி
தினம் தினம் புதிய உச்சம் அடைந்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}