கீவ்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், உக்ரைன் மீது போர் தொடுத்ததை அவருக்கு மிக மிக நெருக்கமானவர்களே விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி.

'Year' என்று பெயரிடப்பட்ட ஒரு டாக்குமென்டரியில் பேசும்போது இப்படிக் கூறினார் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடமாகி விட்டது. ஆனாலும் போர் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.
நடனமாடும்போதே மாரடைப்பு.. அடுத்தடுத்து 4 சம்பவங்கள்.. அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்!
இந்த நிலையில் இதையொட்டி 'Year' என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தான் ஜெலன்ஸ்கி இப்படிக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தை அந்த நாட்டில் பலரும் விரும்பவில்லை. ஏன் புடினுக்கு மிக மிக நெருக்கமானவர்களே கூட விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் இதழும் இதேபோல ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. புடினின் செயல்பாடுகளால் அவருக்கு நெருக்கமானவர்களே கூட அதிருப்தி அடைந்து வருவதாகவும், இந்த அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறியிருந்தது. ரஷ்யப் படையினர் பெரும் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் கதறுகிறார்கள். போரை முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அந்த செய்தி கூறியிருந்தது.
இதற்கிடையே, உக்ரைன் கூட்டுப்படை தளபதி மேஜர் ஜெனரல் எடுவார்ட் மைகேலோவிச் மாஸ்கலோவை பதவி நீக்கம் செய்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. புதிய தளபதியாக ஒலெக்சாண்டர் பாவுலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}