- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
டேய் மாப்ள, எங்களுக்குத் தெரியாம இன்னும் என்னவெல்லாம் மறைச்சிருக்கே சொல்லுடா என்று சுந்தரை உசுப்பேத்தி விட்டான் அவன் நணபன் ரவி.
மாப்ள, இவன் பயங்கரமான ஆளுடா. நம்ம கூடவே இருக்கான். ஆனால் நமக்கே தெரியாம சத்தமில்லாமப் போய் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கான் பாரு, கார்த்தி அவன் பங்கிற்கு ஏற்றிவிட....
அதானே டேய் மாப்ள, எப்புடி., பொண்ண மட்டும் பாத்துட்டு வந்தீங்களா, இல்ல கல்யாணத்துக்கு தேதிய குறிச்சிட்டு வந்தீங்களா? கேட்டது மற்றோரு சீனியர் நண்பர் கிருபா.ம்ம்ம் விட்டா இந்நேரம் மாப்ள நமக்கெல்லாம் அல்வா கொடுத்துட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பாரு இல்லயா தமிழ் என்றான் இடையில் புகுந்த நண்பன் சேகர்.
எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? நானே கடுப்புல இருக்கேன். நீங்க என்னடான்னா என்னைய சீண்டிகிட்டு இருக்கீங்க என்றான் சுந்தர் வெறுப்பாக.
ஏய் எதுக்கு இப்போ நீ இப்படிக் கத்துற என்றபடி அங்கே வந்த மூர்த்தியைப் பார்த்து சுந்தர் உட்பட நண்பர்கள் அனைவரும் அமைதியாக, தொடர்ந்தார் மூர்த்தி.
கிருபா, ரவி, கார்த்தி உங்ககிட்ட பேசனும்னு தான் நான் இங்க வந்தேன் பா. ரெண்டு மாதம் முன்பு நான் இவனுக்காக புரோக்கர்ட்ட சொல்லிவச்சு தேடித்தேடி இந்தப் பொண்ணைப் புடிச்சேன். இந்தாங்கப்பா. இது தான் அந்தப் பொண்ணு என்றவாரே சுகந்தியின் புகைப்படங்கள் சிலவற்றை நண்பர்களிடம் கொடுத்தார் மூர்த்தி.
பாரு கிருபா, இந்தப் பொண்ணுக்கு என்ன குறை நீயே சொல்லுப்பா என்ற மூர்த்தியின் குரலில் வருத்தம் தெரிந்தது.
ஏம்ப்பா, கவலைப்படறீங்க என்னாச்சு கேட்டது கிருபாகரன்.
கிருபா, இந்தப் பொண்ணு எப்படி இருக்கா?நான் கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா?
சில நிமிடம் புகைப்படத்தை உற்று நோக்கிய கிருபாவின் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது. ஏம்ப்பா. இந்தப் பொண்ணுக்கென்ன.... நல்லாயிருக்கு. ஏன் என்கிட்ட கேக்குறீங்க... என்ற கிருபாவைத் தொடர்ந்து ரவி, கார்த்தி, சேகர், தமிழரசன் என்று மற்ற எல்லோரிடமும் சுகந்தி புகைப்படத்தைக் காண்பித்த மூர்த்தி இந்தப் பொண்ணு சாருக்கு பிடிக்கலியாம். சாருக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லியாம். நான் படாதபட்டு இந்தப் பெண்ணை இவனுக்காகத் தேடிப்பிடிச்சேன் பா. இதுல ஒரு கூத்து என்னனு கேளுங்க. அந்தப் பொண்ணு தான் முதல்ல கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்துச்சு. அவங்க வீட்ல எல்லாரும் சேர்ந்து பேசினதும் ஒத்துக்கிச்சுப்பா என்று சுகந்தியை முதல் முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டது முதல் சுந்தருக்கு பெண் பார்த்து வந்ததுவரை நடந்த விஷயத்தை ஒன்று விடாமல் சொல்லிமுடித்தார்.
அந்தப் பொண்ணு மேல எந்தத் தவறும் சொல்ல முடியாது கிருபா. சுகந்திகிட்ட நான் அவள் அப்பாவோட பிரெண்டுனு என்னை அறிமுகப்படுத்தி, நல்லாப் பேசிட்டு இருந்துட்டு மறுநாளே இவனுக்காகத் தான் நான் உன்னைப் பெண் பார்க்க வந்தேன்னு சொன்னா யாருக்கு தான் கோபம் வராது சொல்லு. அந்தப் பெண் சுகந்தியும் அந்தக் கோபத்தில் இருந்துச்சு. அதான் பெண் பார்க்கப் போனப்ப இவன் கிட்ட அந்தப்பெண் சரியா முகம் கொடுத்துப் பேசலப்பா. அதை மனசில் வச்சுகிட்டு இவன் இப்போ அந்தப் பொண்ணே வேணாங்கறான். இது சரியா நீயே சொல்லுப்பா என்றார் மூர்த்தி. அவர் குரலில் வருத்தம் இலையோடியது.
ஏய் சுந்தர் அதான் அப்பா இவ்ளோ சொல்ராங்க. உனக்கென்ன வீம்பு வேண்டிக்கிடக்கு. இந்தப் பொண்ணுக்கு என்னையா குறைச்சல் என்ற கிருபா டேய் உன் மண்டைல இப்பவே பாதியக்காணோம். இது நல்ல சம்பந்தம் மாதிரி தான் தெரியுது. பேசாம அப்பா பேச்சேக்கேட்டு சீக்கிரமா கல்யாணத்தை முடிக்கிற வேலையப்பாரு. இல்ல இந்த மண்டையப் பாத்துட்டு ஒரு பய உனக்குப் பொண்ணு கொடுக்க மாட்டான் பார்த்துக்க. நல்லா யோசிச்சு அப்பாகிட்ட நல்ல பதிலைச் சொல்லு என்று கிருபா, சுந்தருக்கு மட்டுமே கேட்கும் படி தாழ்ந்த குரலில் சொல்ல முறைத்தான் சுந்தர்.
அப்போ நான் கிளம்புறேன் பா. நாளைக்கு எனக்கு டியூட்டி இருக்கு. நீங்க எல்லாரும் இவனுக்கு நல்லா எடுத்துச்சொல்லி இந்த வாரத்துக்குள்ள எனக்கு நல்ல பதில் சொல்லச் சொல்லுங்க. அப்பதான் பெண் வீட்டுக்காரங்ககிட்ட நாம மேற்கொண்டு பேசி முடிக்க முடியும் என்ற மூர்த்தியை ஏறிட்டார் தமிழரசன்.
அப்பா இவனை சம்மதிக்கவைக்கிறது எங்கள் பொறுப்பு. நீங்க அந்தப் பொண்ணை இவனுக்கு பேசி முடிக்கிற வேலையைப் பாருங்க. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கப்பா. நாங்க பார்த்துக்கிறோம். நீங்க போய்ட்டு வாங்க என்று மூர்த்தியை வழியனுப்பிவைத்தனர்.
மூர்த்தி கிளம்பிவிட்டார் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பிறகு சுந்தரிடம் வந்தான் நண்பன் ரவி.
டேய் மாப்ள. பொண்ணோட அம்மா, அவங்க பெரியம்மா, அத்தை எல்லாரும் நம்ம வீட்டை பயங்கரமா நோட்டம் விட்டாங்க தெரியுமா. இதென்ன எங்க பார்த்தாலும் சிகரெட் துண்டுகளும், பிராந்தி பாட்டிலுமா கிடக்குதேனு ஒரு அம்மா சொல்ல பேச்சலர்ஸ் ரூம்னா அப்படி, இப்படித்தான் இருக்கும்னு சொல்றாங்க இன்னொரு அம்மா. அப்படிச் சொன்னது வேற யாருமில்ல. உன் மாமியார் தான்யா. இந்தக்காலத்தில் எந்த மாமியார் இவ்ளோ ஜோவியலா இருப்பாங்கன்ற. பேசாம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாப்ள. பொண்ணு அழகா இருக்கு, நல்லாப்படிச்சிருக்கா., அதோட நல்ல வசதியான சம்பந்தம்னு சொன்னாரு உங்க அப்பா. தேவையில்லாம முரண்டுபுடிச்சிட்டு நல்ல சம்பந்தம் இதை கைநழுவ விட்டுடாத. அவ்ளோ தான் சொல்வேன். அப்புறம் உன் இஷ்டம்
நான் வரேன் என்றுவிட்டு நழுவினான் சேகர்.
எல்லோருமாகச் சேர்ந்து பேசியதில், சுந்தர் ஒருவாறு மனம் மாறினான். அடுத்த இரண்டு தினங்களில் மூர்த்தியிடம் தனக்கு திருமணத்தில் சம்மதம் இருப்பதாகச் சொல்ல, மூர்த்தி படு வேகமாக காரியத்தில் இறங்கினார்.
அடுத்த மூன்று வாரங்கள் கழித்து இரு வீட்டாரும் சேர்ந்து பேசி நிச்சயதார்த்தம் தேதி குறித்துப் பேசி முடித்தனர்.
நடக்கப்போகும் விபரீதம் அறியாத கலங்கம் அறியாத கன்னி சுகந்தி அவள் தன் வீட்டின் தோட்டத்தில் தன்னை மறந்து தனியாளாக ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்க, இங்கே சுந்தர் தலைக்கு மீறிய போதையில் கால்கள் தடுமாற நடந்து வந்தவன் தன்னிலை மறந்து படுக்கையில் சரிந்தான்.
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).
உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தஞ்சையில் கொடுமை.. 13 வருடமாக காதலித்த.. ஆசிரியையை தீர்த்துக் கட்டிய காதலன்!
எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? நானே கடுப்புல இருக்கேன்.. புது வசந்தம் (8)
செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்
2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தமிழகம் நோக்கி நகரும் புயல்...நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்
லோகேஷ் கனகராஜ்.. 7வது படத்தை இயக்கும் பணியில் தீவிரம்.. அது யாருடைய படம்
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்...ரிக்டரில் 6.6 ஆக பதிவு
{{comments.comment}}