சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஆர். அஸ்வின் இடம் பெறுகிறார். அவரை ரூ. 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை மண்ணின் மைந்தரான அஸ்வின், ஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பிய முக்கிய வீரர்களில் ஒருவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2009 முதல் 2015ம் ஆண்டு சீசன் வரை விளையாடியவர் அஸ்வின். அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது, புதிதாக உருவாக்கப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடினார். 2 சீசன்கள் அதில் இருந்தார்.

2017 சீசனில் மட்டும் அவர் விளையாடவில்லை. காயம் காரணமாக விலகியிருந்தார். அதன் பின்னர் 2018ல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று அதன் கேப்டனாக செயலாற்றினார். பிறகு அடுத்த 2 சீசன்களுக்கு அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடினார். கடைசி சீசன்களாக அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரை தக்க வைக்க ராஜஸ்தான் அணி தீவிரமாக முயன்றது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அஸ்வினை மீண்டும் வாங்கி விட்டது.
2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சொந்த அணிக்கே அஸ்வின் திரும்பி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தோனி, ஜடேஜா, அஸ்வின் ஆகிய மூன்று ஜாம்பவான்களையும் மீண்டும் ஒரே அணியில் பார்க்க சிஎஸ்கே நிர்வாகம் விரும்பியதே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் சில நாட்களுக்கு முன்புதான் தனது யூடியூப் சானலில் ஜாலியான ஒரு வீரர்கள் ஏலத்தை நடத்தினார் அஸ்வின். அதில் தன்னை ரூ. 8 கோடிக்கு விற்றிருந்தார். ஆனால் அதை விட கூடுதல் தொகைக்கு அவர் இன்று ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் ஐபிஎல் தொடரில் இதுவரை 211 போட்டிகளில் விளையாடியுள்ளார். 180 விக்கெட்களைச் சாய்த்துள்ள அஸ்வின், 800 ரன்களையும் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வாங்க அஸ்வினும் முக்கியக் காரணம் ஆவார்.
சென்னை அணியில் இதுவரை 4 வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஏலத்தில் இதுவரை நான்கு வீரர்களை எடுத்துள்ளது. ஆர் அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி மற்றும் டேவன் கான்வே ஆகியோரே அவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}