பெண்ணை பேச பெண்ணே எழு!

Mar 31, 2026,01:19 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


பொந்துக்குள் நண்டாகப் புதைந்து இருந்தாய்

பொறுமைக்கு கடலாக வாழ்ந்து இருந்தாய்

ஆழிக்குள் முத்தன அமிழ்ந்திருந்தாய்

ஆமை போல் உனக்குள் அடங்கி இருந்தாய்


அடுக்களை வாழ்வில் மூழ்கிக் கிடந்தாய்

அடிமைத் தனத்தில் வாடிக்கிடந்தாய்

சிறைக்குள் கிளியாய்சிக்கிக் கிடந்தாய்

சிமினிக்குள் ஒளியாய் மறைந்து கிடந்தாய்


ஆழிக்குள் மூழ்கிய ஆதவன் வான்

அறியணை ஏறிவருவதைப் போல்

புரட்சி புயலாய் புறப்படு பெண்ணே

புது உலகம் படைக்க உருவெடு பெண்ணே




அடிக்கும் கோளுக்கு அஞ்சாத அரவமாய்

வெடிக்கும் புரட்சியில் வீறு கொண்ட ஜான்சியும்

இந்தியாவை காத்திட 

ஈரெட்டு குண்டுகளை இதயத்தில் தாங்கிய இந்திராவும்


வெள்ளையனை‌ எதிர்த்த வேலுநாச்சியும்

விண்வெளி ஆய்வில் வெற்றி கண்ட கல்பனா சாவ்லாவும்

உஹது போருக்கு உகந்தே சென்ற

உத்தம நபி மனைவி ஆயிஷாவும்


சாதித்த பெண்களின் சாதனைகள் எல்லாம்

சரித்திரம் காட்டும் கோடான கோடி

இன்று

அன்புகாட்டுபவள் பெண்

அறிவியலில் புதுமைகளை ஆக்கி கொடுப்பவள் பெண்

.

ஆண்மீகம் ஊட்டுபவள் பெண்

இன்பம் கொடுப்பவள் பெண்

ஈகை புரிபவள் பெண்

விண்ணை அளப்பவள் பெண்

மண்ணை ஆள்பவள் பெண்

மயானம் காப்பவள் பெண்


நிலவைக்காட்டி சோறு ஊட்டியவள்

நிலவில் குடியேற வழியும் காட்டுகிறாள்

பெண்களே நாட்டின் கண்கள் என்ற

பாரதிதாசனின் ஒற்றை வரிகள்

உந்து சக்தியானது

பெண்ணைபேச பெண்ணே எழுந்திரு

புது உலகம் படைத்திட உருவெடு


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்