- மஞ்சுளா தேவி
சென்னை: "ரா ரா.. சரசுக்கு ரா ரா" படத்தின் டிரைலரும், பாடலும் வெளியாகி பட்டையைக் கிளப்பியுள்ள நிலையில் இந்தப் படம் முற்றிலும் வயது வந்தோருக்கானது.. எனவே குழந்தைகள், குட்டீஸை படத்துக்குக் கூட்டி வராதீங்க என்று அதன் தயாரிப்பாளர் ஜெயலட்சுமி ரொம்ப நேர்மையான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
படத்தின் தலைப்பைக் கேட்டதும் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் வந்த பாடல் வரிதான் ஞாபகம் வருகிறது. இந்தப் பாடலின் வரியில் இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. ஆனால் படத்தின் கதைதான் வித்தியாசமானதாம்.
.jpg)
ரா ரா சரசுக்கு ரா ரா என்ற படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இப்படத்தை கேஷவ் தெபுர் இயக்கியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ,பெங்காலி, என்ற இந்திய மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார்.
நடன இயக்குனர் பிரபு தேவா, பிரேம் ரக்ஷித், ராகவா லாரன்ஸ் போன்றோரிடம் உதவி நடன இயக்குனராகவும் பணியாற்றியவர். இவர் நடன கலைஞனாக சுமார் 2000 படங்களில் ஆடியும் உள்ளார். படத்திற்கு ஜி கே வி இசையமைத்துள்ளார்.

கார்த்திக், காயத்ரி பட்டேல், கே. பி ஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஷ்வா, ரவிவர்மா, பெஞ்சமின், சிம்ரன், தீபிகா காயத்ரி, சாரா, ஜெயவாணி, அக்ஷிதா, விஜய் பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை வேறு ஒன்றுமில்லை.. ஒரு லேடீஸ் ஹாஸ்டல்.. அதில் ஒரிரவில் நடக்கும் தொடர் சம்பவங்கள்.. இதுதான் படத்தின் கதை. யதார்த்தமாக லேடிஸ் ஹாஸ்டலுக்குள் கொலை நடக்கிறது . இதிலிருந்து அங்குள்ள பெண்கள் தப்பினார்களா.. அல்லது சிக்கிக் கொண்டார்களா.. என்பதே படத்தின் கதை. அந்த ஒரு ராத்திரியில் நடக்கும் பரபரப்பான, விறுவிறுப்பான, கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்த க்ரைம், ஆக்சன், ஹாரர், ரொமான்ஸ் என அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்குமாம்.

படத்தில் ஹாரரும், ரொமான்ஸும் நிறைய இருப்பதால் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது .இதனால் வயது வந்தோர் பார்க்கக்கூடிய படமாக இது உருவாகியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜெயலட்சுமி கூறுகையில், படத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் தர்ம சங்கடத்தில் நெளிகின்ற நிலைமையை நாம் பார்க்கிறோம். அதனால் நாங்கள் இது ஒரு ஏ படம் தான் என்று சொல்லியே விளம்பரப்படுத்துகிறோம். சிறுவர்கள் யாரும் இந்த படத்திற்கு வர வேண்டாம். இது அனைவருக்குமான படம் அல்ல. பொய் சொல்லி ஏமாற்றுவது மிகத் தவறு. அதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இந்தக் காலத்தில் கூட இத்தனை நேர்மையான தயாரிப்பாளரா.. சூப்பர் மேடம் நீங்க!
"ரா ரா சரசுக்கு ரா ரா" நவம்பர் 3ஆம் தேதி வெளி வர உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}