விஜய பிரபாகரனை ஆசிர்வதித்த ராதிகா.. கட்டிப் பிடித்துக் கொண்ட தமிழிசை தமிழச்சி.. சுவாரஸ்ய காட்சிகள்!

Mar 25, 2024,10:47 PM IST

சென்னை: விருதுநகர் தொகுதியில் இன்று பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், தேமுதிக கட்சி சார்பில்  விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டனர். தென் சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்த தமிழிசை செளந்தரராஜனும், தமிழச்சி தங்கப்பாண்டியனும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.


மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இன்று  தமிழகம் முழுவதும் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கிறது.  27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 28ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும்.




இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். சரத்குமார் சமீபத்தில் தான் பாஜக வுடன் தனது கட்சியை முழுமையாக இணைந்தார். அதன்பின்னர் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு பொதுமக்களை சந்தித்தார்.  அதன் பின்னர் மனு தாக்கல் செய்ய வந்தார்.


ராதிகா வந்தபோதுதான் விஜய பிரபாகரன் மனுத்தாக்கலை முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். விருதுநகரில் முரசு சின்னத்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். முன்னதாக தனது தாயாரும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்துடன் பராசக்தி மாரியம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் விஜயபிரபாகரனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 


வேட்பு மனு தாக்கலின்போது வெளியே வந்த விஜய பிரபாகரன், ராதிகாவைப் பார்த்து வணக்கம் வைத்தார். அவரை ராதிகா வாழ்த்தினார். சரத்குமாரும் தட்டிக் கொடுத்தார். எனது மகளுடன் சேர்ந்து படித்தவர்தான் விஜய பிரபாகரன், அவரும் எனக்கு மகன் போலத்தான் என்று ஏற்கனவே ராதிகா கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.


ராதிகாவும், விஜயபிரபாகரனும் இருவரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதினால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கடும் போட்டி நிலவி வருகின்றது. இருவரும் நட்சத்திர போட்டியாளர்கள் என்பாதால் விருதுநகர் தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது.  திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவுமான மாணிக்கம் தாகூரே மீண்டும் போட்டியிட உள்ளார். இவ்வாறாக முக்கிய பிரபலங்கள் மோதும் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.


தென் சென்னையில் சகோதரிகள் பாசம்




மறுபக்கம் தென் சென்னையிலும் சுவாரஸ்ய காட்சியைப் பார்க்க முடிந்தது. அங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப் பாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கலின்போது இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு கட்டித் தழுவி பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.


தமிழும் தமிழும் மோதினால் என்ன.. நெட் ரிசல்ட் ஏதாவது ஒரு தமிழ்தானே வெல்லப் போகிறது.. எந்தத் தமிழ் வென்றாலும் அது தென் சென்னையை உயர்த்தப் பாடுபடட்டும்!

சமீபத்திய செய்திகள்

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்