ராதிகாவுடன்.. நம்பர் பிளேட் இல்லாத புல்லட்டில் பறந்து.. வாக்கு சேகரித்த சரத்குமார்!

Apr 13, 2024,04:43 PM IST
சிவகாசி: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலில் வருவது போல புல்லட்டில் தனது மனைவி ராதிகா சரத்குமாரை ஏற்றுக்கொண்டு ஜாலியாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் நடிகர் சரத்குமார்.

படத்தில் வருவது போல ஜாலியாக அவர் புல்லட்டில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தாலும் கூட அந்த புல்லட்டில் நம்பர் பிளேட்டும் இல்லை, அதே போல சரத்குமாரும் ராதிகாவும் ஹெல்மெட்டும் அணியாமல் புல்லட்டில் சென்றதால் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராதிகா சரத்குமார். இவர் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அப்பகுதியில் முகாமிட்டு வந்த ராதிகா சரத்குமார் வாகனப் பேரணி மூலம் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ராதிகாவும் சரி அவரது கணவர் சரத்குமாரும் சரி பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர்கள்.  பலரின் மனதை வெகுவாக கவர்ந்தவர்கள். இதற்காகவே இவரை காண மக்கள் கூட்டம் அலைமோதும். இதன் மூலம் எளிதாக வாக்கு சேகரிப்பில் கலக்கி வருகிறார் ராதிகா சரத்குமார்.



இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் தலையில் ஹெல்மெட் இல்லாமல்.. நம்பர் பிளேட் இல்லாமல்.. புல்லட்டில் கணவன் மனைவி இருவரும் ஹாயாக சிவகாசி பகுதிகளில் வலம் வருகின்றனர். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி என சொல்வது வழக்கம். இது போல தேர்தல் வந்துட்டாவே சின்ராச கையில பிடிக்க முடியாது என சொல்லலாம். ஏனெனில் சரத்குமார் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கி படு ஜோராக வேலை செய்து வருவதால் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாகன பேரணி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கி வந்தனர்.

தற்போது ஒரு படி மேலே சென்று இருவரும் புல்லட்டில் வலம் வந்து மக்களை  சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

ஆனால் நம்பர் இல்லாத புல்லட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொறுப்பான ஒரு வேட்பாளராக இருப்பவர் இப்படி ஹெல்மெட் போடாமல் பயணிக்கலாமா அதுவும் நம்பர்  ப்ளேட் இல்லாத வாகனத்தில் பயணிப்பது சரியான செயலா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்