எனக்கு மட்டும் எதுக்கு எக்ஸ்ட்ரா.. பிசிசிஐ அறிவிப்பை நிராகரித்த ராகுல் டிராவிட்.. குவியும் பாராட்டு

Jul 10, 2024,10:55 AM IST
மும்பை:  டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு தலா ரூ. 2.5 கோடி போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிடுக்கு கூடுதலாக ரூ. 2.5 கோடி போனஸ் தொகையை பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது அதை வேண்டாம் என்றும், எல்லோருக்கும் போலவே தனக்கும் சமமான அளவில் போனஸ் தொகை கொடுத்தால் போதுமானது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

ராகுல் டிராவிடின் இந்த சிம்ப்ளிசிட்டி பலரின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. உண்மையான ஜென்டில்மேன் ராகுல் டிராவிட்தான் என்று பலரும் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியா அபாரமாக வென்றது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டவர் ராகுல் டிராவிட். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 125 கோடி போனஸ் தொகையை அறிவித்தது. இந்த தொகையானது வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப் என அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



மேலும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு ரூ. 5 கோடியும், மற்ற பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 2.5 கோடியும் வழங்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால் தனக்கும் ரூ. 2.5 கோடி கொடுத்தால் போதுமானது, 5 கோடி வேண்டாம் என்று ராகுல் காந்தி கூறி விட்டாராம்.  அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் தரும் போனஸ் தொகையையே தனக்கும் தந்தால் போதுமானது, கூடுதலாக வேண்டாம் என்று பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார் ராகுல் டிராவிட் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயிற்சியாளர்கள் குழுவில் ராகுல் டிராவிட் தவிர பந்து வீச்சுப் பயிற்சியாளர் பரஸ் மெம்ப்ரி, பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் உள்ளனர். ராகுல் டிராவிடின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ராகுல் டிராவிட் இதுபோல  பெருந்தன்மையுடன் நடந்த கொள்வது இது முதல் முறையல்ல. முன்பு 2018ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, ராகுல் டிராவிட்தான் பயிற்சியாளராக இருந்தார். அப்போது அவருக்கு ரூ. 50 லட்சமும், அணியின் பிற பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 20 லட்சமும் பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் அப்போதும் தனக்கு ஸ்பெஷலாக தர வேண்டாம் என்று ராகுல் டிராவிட் கூறியதைத் தொடர்ந்து அனைவருக்கும் சமமாக தலா ரூ. 25 லட்சம் பரிசுத் தொகையை பிசிசிஐ பிரித்துக் கொடுத்தது என்பது நினைவிருக்கலாம்.

சுயநமில்லாத, அணிக்கு அர்ப்பணிப்புடன், எளிமையாக செயல்படக் கூடியவர் ராகுல் டிராவிட். அதை ஒவ்வொரு முறையும் அவர் நிரூபித்துக் கொண்டே போகிறார். இது அவர் மீதான மரியாதையையும் கூட்டிக் கொண்டே போகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்