திஸ் "குவாலிபைட்" எம்.பி.. டிவிட்டர் பயோவில் குத்திக் காட்டிய ராகுல் காந்தி!

Mar 26, 2023,12:56 PM IST
டெல்லி: எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி தனது டிவிட்டர் பயோவில் சிறிய மாற்றம் செய்துள்ளார். அதில் இரட்டை அர்த்தம் வருமாறு Dis'Qualfied என்று மாற்றம் செய்துள்ளார்.

அதாவது "டிஸ்குவாலிபைட்" என்றும் இதற்குப் பொருள் வரும்.. அதேசமயம், "திஸ் குவாலிபைட்" என்றும் பொருள் கொள்ளலாம். இதன் மூலம் தான் டிஸ்குவாலிபைட் செய்யப்பட்டாலும் கூட தகுதி வாய்ந்த நபர் என்பதை குறிக்கும் வகையில் இரட்டை அர்த்தத்துடன் பயோவில் மாற்றம் செய்துள்ளார் ராகுல் காந்தி.



கர்நாடகத்தில் நடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி குறித்துப் பேசியிருந்தார் ராகுல் காந்தி. அந்தப் பேச்சு மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி சூரத் கோர்ட்டில் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்துள்ளனர். ராகுல் காந்தி, தான் ஓயப் போவதில்லை. தொடர்ந்து பேசுவேன் என்று கூறி விட்டார். இதனால் அரசியல் களம் அனல் பறந்து கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் தனது டிவிட்டர் பயோவில் இந்த மாற்றத்தை செய்துள்ளார் ராகுல் காந்தி.

இன்று டெல்லியில் பிரமாண்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட்டது. அதேபோல அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்