"நந்தினிதான் பெஸ்ட்".. நச்சுன்னு சொன்ன ராகுல் காந்தி!

Apr 17, 2023,09:49 AM IST
பெங்களூரு: நந்தினி பாலா.. அமுல் பாலா என்ற அனல் பறக்கும் விவாதத்தில் தனது நிலைப்பாட்டை சூப்பராக சொல்லியுள்ளார் ராகுல் காந்தி.

குஜராத்தைச் சேர்ந்த கூட்டுறவு பால் ஒன்றியத்தின் அமுல் தயாரிப்புகள் நாடு முழுவதும் பிரபலமானவை. அதிலும் அமுல் நிறுவனம் அவ்வப்போது நாட்டு நடப்புக்கேற்ப போடும் மீம்களும், கார்ட்டூன்களும் ரொம்பப் பிரபலம். சமீப காலமாக அமுல் நிறுவனம் தனது பிசினஸை விரிவாக்க ஆரம்பித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக  கர்நாடகத்தில் அமுல் பால் விற்பனையை அது கொண்டு வந்துள்ளது.



அமுல் நிறுவனத்தின் இந்த செயல் கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. காரணம் இருக்கிறது.. அமுல் நிறுவனம், கர்நாடக கூட்டுறவு பால் சம்மேளனத்தை கையகப்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சம்மேளனம் மூலம் தயாரித்து விற்கப்படும் நந்தினி பால், கர்நாடக மக்களிடம் மிகவும் பிரபலமானது.

அமுல் நிறுவனம் கர்நாடகத்திற்குள் காலடி எடுத்து வைத்தால் நந்தினி அழிந்து விடும் என்று அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது அரசியல் பிரச்சினையாகவும் அங்கு மாறி விட்டது. இந்த நிலையில் நந்தினிக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இறங்கவே அமுல் கடும் பாதிப்பை சந்தித்தது. 

இந்தப் பின்னணியில் கர்நாடகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, நந்தினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  நந்தினி விற்பனை செய்யப்படும் கடைக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு நந்தினி பால் உள்ளிட்ட தயாரிப்புப் பொருட்களை வாங்கிப் பார்த்தார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், கர்நாடகத்தின் பெருமை.. நந்தினி தான் பெஸ்ட் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்