டெல்லி: பஹல்காம் சுற்றுலா பகுதியில் நடந்திருக்கும் பயங்ரவாதிகளின் தாக்குதல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி.அதேபோல் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதிகளில் நேற்று அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி போர்க்கள பூமியாக மாறியது. பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் படுகொலை செய்யப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர் இருவர் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து ஸ்ரீ நகர் பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் உலகளாவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சென்றிருந்த நிலையில், தீவிரவாத தாக்குதலை கேட்டறிந்த உடனேயே சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். அங்கு டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதே சமயத்தில் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ள செய்தி வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று பட்டு உள்ளது. அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறாமல், அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடக்காது; அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}