சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீர் பயணமாக இன்று மாலை சென்னைக்கு வர இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று வந்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு இன்று மாலை ரயிலில் வருகிறார். இதனை தொடர்ந்து சென்னையில் சில மணி நேரம் தங்கி விட்டு பிறகு மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு பயணிக்க இருக்கிறார்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்க தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் சில மணி நேரம் தங்கி இருப்பதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ராகுல் காந்தியின் சந்திப்பில் இது குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}