சென்னை: சென்னையில் இன்று காலையிலிருந்து பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு, கிண்டி, மெரினா கடற்கரை, குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 16ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதன் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ,தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
{{comments.comment}}