- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கதேசத்தில் நேற்று மிதிலி புயல் கரையை கடந்து விட்டதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த அழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, புயலாக மாறி, நேற்று வங்கதேசம் அருகே புயல் கரையைக் கடந்தது.இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று கன மழை பெய்யும் மாவட்டங்கள்:

ராமநாதபுரம் ,தேனி ,தென்காசி ,நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி, மயிலாடுதுறை ,தஞ்சை, திருவாரூர் ,நாகை ,புதுக்கோட்டை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை பெய்யும் மாவட்டங்கள்:
புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை எதிர்பார்க்கலாம்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}