சென்னை: தமிழ்நாட்டுக்கு அதிக சேதத்தைக் கொடுக்காமல் பலவீனமாகி, முன்னாள் புயலாக மாறி விட்ட டிட்வா, இன்னும் ஓரிரு நாட்கள் மேகக் கூட்டத்துடன் தமிழ்நாட்டு கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்குமாம். இதனால் 2 நாட்களுக்கு லேசான மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இலங்கையை உலுக்கி விட்ட பின்னர் தமிழ்நாட்டு பக்கமாக வந்தது புயல் டிட்வா. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு டிட்வா புயலால் நல்ல மழை கிடைத்தது. அதேசமயம், வட தமிழ்நாட்டுக்குப் பெரும் பாதிப்பு கிடைக்கவில்லை. பொதுவாக டிட்வா புயலால் தமிழ்நாடு பெரும் பாதிப்பை சந்திக்கவில்லை. நிறைய மழை மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது புயல் வலுவிழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி விட்டது. இருப்பினும் அது தமிழ்நாடு அருகே கடல் பகுதியில்தான் இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அழுத்த தாழ்வு (முன்னாள் டிட்வா) வலுவிழந்து, வடக்கு திசையில் மேகங்களை மீண்டும் பெற்று, அடுத்த 2 நாட்களுக்கு சென்னை கடற்கரை ஓரமாக நீடிக்கும்.

அழுத்த தாழ்வு மண்டலம் (முன்னாள் டிட்வா) சென்னைக்கு மிக அருகில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு சென்னை கடற்கரை ஓரமாகவே நிலைத்திருக்கும். அதனால், அடுத்த 2 நாட்களுக்கு மாறுபட்ட தீவிரத்தில் இந்த வகையான மழையை நாம் எதிர்பார்க்கலாம்.
அடுத்த 24 மணி நேரம்: அழுத்த தாழ்வு மண்டலம் நாள் முழுவதும் சென்னை கடற்கரையில் இருக்கப் போவதால், KTCC (Kanchipuram, Tiruvallur, Chengalpattu, Chennai) மாவட்டங்களில் அவ்வப்போது மழைக்கு வாய்ப்புள்ளது, மேலும் அதன் தீவிரம் அதிகரிக்கும்.
மிதமான மழை: அழுத்த தாழ்வு மண்டலத்துக்குள் வரும் மேகக் கூட்டங்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் முதல் கடலோரப் பகுதிகள் வரை விழ வாய்ப்புள்ளது.
மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, டெல்டா (Delta) மாவட்டங்கள், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை: அடுத்த 24 மணி நேரத்தில் KTCC (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்) பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அழுத்த தாழ்வு மண்டலம் அருகில் இருக்கும் வரை, KTCC-க்கு வாய்ப்பு உள்ளது.
மிக கனமழை: இல்லை.
அதி கனமழை: இல்லை.
டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
மசாலா பாண்டு விவகாரம்...கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்
டிசம்பர் மாதம் வந்தாச்சு.. களை கட்டும் விழாக்கள்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்...புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 01, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
கைத்தட்டல்.. தட்டுங்கள்.. தட்டத் தட்ட ஊக்கம்தான்!
நாணலையே நாணச்செய்யும் இளந்தென்றல் வீசயிலே...!
{{comments.comment}}