சென்னை: தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் தற்போது கன மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யும். இது தவிர சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோட்டிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வரும் மே 16ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}