கிளம்புங்க கிளம்புங்க .. மழை அவ்வளவுதான்.. மீண்டும் வெப்ப அலை வீசப் போகுது.. தமிழ்நாடு வெதர்மேன்!

May 24, 2024,11:45 AM IST

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ரெமல் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் மழை படிப்படியாகக் குறைந்து வெப்ப அலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அச்சச்சோ.. மறுபடியும் வெப்ப அலையா.. அது பயங்கரமானதாச்சே.. என்று மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலகட்டத்திற்கு முன்பே வெயில் கோரத்தாண்டவம் ஆடியது. அப்போது பல்வேறு பகுதிகளில்  வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருந்தது. மே மாத தொடக்கத்தில் வெயில் படிப்படியாக அதிகரித்து உச்சக்கட்டத்தை எட்டியது. ஈரோடு, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 110  டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 




இது தவிர தமிழக அரசும் கோடை வெப்பத்தை சமாளிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இந்த நிலையில்தான், கோடை காலத்தை சமாளிக்க இயற்கையே மக்களுக்கு கருணை காட்டியது போல தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பரவலாக கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து கடந்த ஒரு வார காலமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளனர். வெளியில் போய் சுத்தி விட்டு வந்தாலும்.. எனக்கு வேர்க்கலியே.. ஹய்யா ஜாலி என்று கலகலப்பாக உலா வருகின்றனர்.


இது மட்டுமல்லாமல் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாக உள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நீர் வரத்து அதிகரித்துள்ளது.


புயல் புண்ணியத்தால்.. வெயில் வெளுக்கும்


ஆனால் இந்தப் புயல்தான் தற்போது தமிழ்நாட்டு மக்களின் சந்தோஷத்திற்கு ஆப்பு வைக்கப் போகிறதாம். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


தென்மேற்கு வங்கக் கடலில் புயல் உருவாகி சூறாவளி காற்று வீசி வந்தாலும், தமிழகத்தில் மழை அளவு படிப்படியாக குறையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மழை தொடரும். இது தவிர தென் தமிழக மாவட்டங்களான மதுரை, நெல்லை, வால்பாறை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.


ஆந்திராவை ஒட்டி உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் மீண்டும் தலை தூக்கும்.  வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீச கூடும். குறிப்பாக ராஜஸ்தானில் வரும் நாட்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.


புயல் நகர நகர தமிழ்நாட்டின் மீது நிலவும் ஈரப் பதத்தையும் சேர்த்து உறிஞ்சி எடுத்துச் சென்று விடும் என்பதால்தான் நமக்கு வெயில் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

news

ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?

news

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு

news

"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!

news

திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்

news

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

news

திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!

news

‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்