- அ.சீ.லாவண்யா
எங்கு பார்த்தாலும் மழையாக இருக்கிறது. மழைக்காலம் வந்து விட்டாலே காலை தரையில் வைக்க முடியாது. எங்கும் ஈரம், எதிலும் நச நசதான். இப்படிப்பட்ட நிலையில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சாப்பாடு முதல் வீட்டுப் பராமரிப்பு வரை நிறைய விஷயங்களில் இந்த மழைக்காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சில கவனங்கள் குறித்த டிப்ஸ் இப்போது பார்க்கலாம்.

வெளியில் செல்லும்போது எப்போதும் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்லுங்கள்.
மழையில் நனைந்து விட்டால் ஈரமாக இருக்காதீர்கள். உடைகளை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
கொதிக்கவைத்த அல்லது வடிகட்டிய நீரையே குடிக்கவும்.
மழைக்காலத்தில் சாலையோர பானங்கள் போன்ற, குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.
வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்
சூடான, (சமீபத்தில் சமைத்த) உணவையே சாப்பிடுங்கள்.
மழைக்காலத்தில் சாலையோரச் சாலட், சாலையோர உணவுகள் தவிர்க்கவும். முக்கியமாக junk food தவிர்க்கவும்.
மழை நேரங்களில் மெதுவாக வாகனம் ஓட்டுங்கள்.
தண்ணீர் நிரம்பிய சாலைகளில் செல்ல வேண்டாம்.
வாகனத்தின் லைட், வைபர் சரி நிலையில் உள்ளதா என சரிபார்க்கவும்.
கூரை, சுவர்களில் நீர்க்கசிவு இருந்தால் உடனே சரிசெய்யவும்.
மழைநீர் வடிகால் குழாய்கள் அடைப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
அவசரத்திற்காக டார்ச்சு, பவர் பேங்க் போன்றவை வைத்திருக்கவும்.
சூடான பானங்கள் அருந்தி உடலை சூடாக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது டீ,காப்பி போன்றவை.
அடிப்படை மருந்துகள் கொண்ட முதல் உதவி பெட்டியை வைத்திருக்கவும்.
நீர்ப்புகா செருப்பு அல்லது Shoes அணியவும்.
லேசான, விரைவில் உலரும் ஆடைகளை பயன்படுத்துங்கள்.
மின்சார ஸ்விட்ச் உள்ள சுவரில் ஈரப்பதம் இருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள். இருந்தால் எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டு பராமரிக்க மறக்காதீர்கள்.
இவையெல்லாம் படித்தவுடன் நிறுத்திவிடாதீர்கள் ஜஸ்ட் follow பண்ணுங்க. மழை காலத்தில் பாதுகாப்புடன் இருங்க.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
பாஞ்சராத்திர தீபத்தின் முக்கியத்துவம் என்ன.. அதை ஏற்றுவது ஏன்?
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ.320 குறைவு
{{comments.comment}}