- சங்கமித்திரை
சென்னை: "ரஜினிகாந்த் - கமல்ஹாசன்".. இந்தப் பெயரைக் கேட்டாலே தமிழ் சினிமா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஒரு பத்து ஸ்டெப் பின்னாடி நின்று பரவசமாக பார்த்து ரசிக்கும். அது ஒரு மாஜிக்.. இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை போகிற போக்கில் செய்து அசத்திய அட்டகாசமான கலைஞர்கள்.
இந்த இரு கலைஞர்களும் எங்கெல்லாம் சந்தித்துக் கொள்கிறார்களோ அதுவும் பரவசமாக பார்க்கப்படும். இந்த நிலையில் இன்று இருவரும் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். அதுவும் ஒரே படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் தத்தமது படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நடந்த சந்திப்பு அது.
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற்று வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுகிறது.
கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த உலகநாயகன் கமல்ஹாசன் "என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்" என காலை 8 மணிக்கே தலைவர் 170 ஷீட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து, சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.
கமல்ஹாசனைக் கண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இருவரும் சொல்லி வைத்தாற் போல கருப்பு நிற உடையில் காட்சி தந்தது ஆச்சரியமாக இருந்தது.
இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு பாபா, பஞ்சதந்திரம் படங்கள் இதே இடத்தில் ஷூட்டிங் நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.
நட்பு அழகானது.. இணைந்திருந்தாலும்.. பிரிந்திருந்தாலும்!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}