சென்னை: விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த். அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கெளரவித்து இருக்கிறார்கள். இது நமக்கு எல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வாகும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த். இவர் தேமுதிகவை ஆரம்பித்து எதிர்கட்சி தலைவரானவர். தனது வாழ்நாளில் பல்வேறு மக்களின் துயரங்களை துடைத்தவர். தமிழக மக்களிடையே தனக்கென்று ஒரு இடம் பிடித்த உன்னத கலைஞர். இப்படிப்பட்ட கலைஞர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
அவரது உடல் சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தினமும் இன்று வரை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்ந நிலையில், மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. இந்த விருதினை கடந்த மே 9ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் , விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவிடம் வழங்கினார்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது பெற்றதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வணக்கம், என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்து இருக்கிறார்கள். இது நம் எல்லாருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாகும். இந்திய நாட்டின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்கள். அது அவரின் பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை என்னால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டக்குனு தோன்றி சாதனைகள் பல செய்து மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பார்க்க முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். மதுரையில் பிறந்த நம் மதுரை வீரன் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நாமம் வாழ்க. நன்றி என தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}