சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து விழாக் குழுவினர் அழைப்பிதழை வழங்கி உள்ளனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 100வது பிறந்தநாள், கலைஞர் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில், தமிழ் திரையுலம் சார்பாக, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த மாதம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஏற்பட்ட புயல் மழையால் இவ்விழா தள்ளி வைக்கப்பட்டது. ஜனவரி 6ம் தேதி கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து ஜனவரி 6ஆம் தேதி அன்று கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பான, புதிய அழைப்பிதழை விழாக் குழுவினர் வழங்கி உள்ளனர்.

கலைஞர் 100 விழாவில் பன்மொழித் திரைப் பிரபலங்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்... 6.2 ரிக்டர் அளவில் பதிவு
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
{{comments.comment}}