சென்னை: மாநிலங்களவை எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 18 ராஜ்யசபா எம்பிகளின் பதவி காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ராஜ்யசபாவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.ஜூன் 19ம் தேதி தேர்தல் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 02ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கு திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், கூட்டணி கட்சிகள் சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பமனு தாக்கலுக்கான கால அவகாசம் ஜூன் 09ம் தேதியுடன் நிறைவடைந்தது. கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் மொத்தம் 13 பேர் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுக்களுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ம் தேதி காலை நடைபெற்றது.
இந்நிலையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், சுயேட்சை வேட்பாளர்களின் அனைவரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு ஏற்கப்பட்ட 6 பேரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்ய வில்லை. இதன்காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்பி., ஆகியுள்ளார். அதற்கான சான்றிதழையும் தற்போது பெற்றுள்ளார்.
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}