விழுப்புரம்: பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து நீடித்து வருகின்றன. டாக்டர் ராமதாஸிற்கு ஆதரவாக எம்.எல்.ஏ அருள் செயல்பட்டு வருகிறார். இவரை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசுகையில்,
பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ஜிகே மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. என் மனம் வேதனை படும் அளவு செய்கின்றனர். எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு நான் கட்சியை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றேன்.

கட்சியின் இணை செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார். பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பாமக மகளிர் மாநாடு நடத்துகிறோம். அதிமுக திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. பாமக செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு கருத்துக்களை கேட்ட பிறகுதான் கூட்டணி குறித்து பதில் சொல்ல முடியும்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் இதர சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலைகளில் சீரமைப்பு பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு குடும்பத்தாருக்கு ரூபாய் ஒரு கோடியில் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}