ராமேஸ்வரம்: இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
400 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் தமிழக மீனவர்கள் விசைபடகுகளை கரைக்கு வேகமாக திருப்பியுள்ளனர். அப்போது, மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர்.

இதில், கார்த்திகேயன் என்பவரது படகு மீது இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், கார்த்திகேயனின் படகில் நீர் புகுந்து, கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் மீனவர் மலைச்சாமி கடலில் மூழ்கி இறந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாயமான ராமச்சந்திரனை தேடும் பணி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ரமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்தது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலுக்கு மத்திய அரசும் உடனடியாக ரியாக்ட் செய்தது. தமிழக மீனவர் உயிரிழந்து இருப்பதற்கு, டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிளை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.
அதேசமயம், இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவரின் உடலை ராமேஸ்வரம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று அறிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மலைச்சாமியின் உடல் மற்றும் அவருடன் மீன்பிடிக்க சென்று காயமடைந்த மீனவர்கள் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இருவரும் சரியாக நள்ளிரவு 2 மணியளவில் இந்திய கடற்படை அதிகாரிகளிடம், இலங்கை கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் இந்திய கடற்படை அதிகாரிகள் அதிகாலை 4மணியளவில் ராமேஸ்வரத்திற்கு அவர்களை அழைத்து வந்தனர். மலைச்சாமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு அசாதாரண நிலை நீடிக்கிறது.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}