சென்னை: டியர் கம்ரேட் படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்படம் குறித்த நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் கீதா கோவிந்தம் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் இணைந்து நடித்த படம் டியர் காம்ரேட். இப்படம் வெளி வந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்த படம் மெகா ஹிட் அடித்ததால், இந்த படத்தின் 5 ஆண்டு நிறைவை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

டியர் காம்ரேட் படம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் ராஷ்மிகா. அவர் வெளியிட்ட பதிவில், டியர் காம்ரேட் படத்தை நேசித்த மற்றும் தொடர்ந்து நேசிக்கும் அனைவருக்கும் நன்றி. டியர் காம்ரேட் படத்திற்குப் பிறகு தான் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்றும் பலர் என்னை லில்லி என்றே அழைக்கின்றனர். படப்பிடிப்பு முழுவதும் சிரிப்பும் கண்ணீரும் நிறைந்து இருந்தது. இப்படம் குறித்த ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது யுன்று தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இருப்பினும் அவரது புஷ்பா 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கும் இயக்குனர் சுகுமாறனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
OVERCOMING STRUGGLES.. சவால்களை நொறுக்கி.. சாதனைகளைப் படைப்போம்!
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
{{comments.comment}}