நடிகர் ரவி மோகன், முன்பு ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டவர். தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை இன்று வெளியிட்டார்.
யோகி பாபுவுடன் இணைந்து தனது முதல் படத்தை ரவி மோகன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்தை வெளியிட்ட பிறகு, ரவி மோகன் கெனிஷா பிரான்சிஸுடன் குன்றக்குடி முருகன் கோவிலுக்குச் சென்றார். ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் யோகி பாபு நடிக்கும் படம் தான் இந்த நிறுவனத்தின் முதல் படமாக இருக்கும்.
ரவி மோகன் தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விரைவில் புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளார்.

மறுபக்கம் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் இடையிலான பிரச்சினையை வழக்கு முடியும் வரை பொது வெளியில் பகிரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.
ஒரு நடிகராக தனித்துவத்தை நிரூபித்தவர் ரவிமோகன். தற்போது அவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் யோகி பாபு இயக்குநராக அவதாரம் எடுக்கப் போவது மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி படத்தில் கலக்கியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இனி இப்படி ஒரு பிறவி வேண்டாம்.. பிறவியே வேண்டாம்!
தடம் மாறும் தமிழர் பண்பாடு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!
{{comments.comment}}